Tuesday, March 30, 2010

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால்?

இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல.





முதலாளி: மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!



சரக்கு மாஸ்டர்: கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...



முதலாளி: சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..



மாஸ்டர் ஒருவரிடன் சென்று....



மாஸ்டர்: ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...

அவன்: நான் PM ஆ இருந்தேன்..



மாஸ்டர்: என்னது Prime Minister ராவா...????

அவன்: இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.



மாஸ்டர்: அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....

PM: இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....



மாஸ்டர்: அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...

PM: நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.



மாஸ்டர்: நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.



PM: இது பேரு தான் ப்ளானிங்....

மாஸ்டர்: அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...



ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.



மாஸ்டர்: தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....

டெவலப்பர்: சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.



மாஸ்டர்: சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....

டெவலப்பர்: யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,



மாஸ்டர்: விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....



இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.



மாஸ்டர்: நீ என்னவா இருக்க....?

அவன்: டெஸ்டரா இருக்கேன்.



மாஸ்டர்: ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...

டெஸ்டர்: கலர் பார்க்குறேன்.



மாஸ்டர்: எதுக்கு...??

டெஸ்டர்: இத Sanity Testingனு சொல்லுவாங்க...



அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.



மாஸ்டர்: இதுக்கு என்ன பேரு....??

டெஸ்டர்: Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...



டெவலப்பர்: நான் சரியா தான் போட்டேன்.

டெஸ்டர்: நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....



மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.



சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.



டெஸ்டர்: ரொம்ப காரம்மா இருக்கு...



மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.

டெஸ்டர்: இப்ப நல்லா இருக்கு...



டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.



மாஸ்டர்: எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...

டெஸ்டர்: இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.



மாஸ்டர்: அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....



மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.



முதலாளி: என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....

மாஸ்டர்: இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.



ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.



முதலாளி: ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?

மாஸ்டர்: ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...



முதலாளி : ???????????????????

Saturday, December 5, 2009

ப்ரோகிராமர் மகன்...

சிவாஜி: டேய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

கமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

சிவாஜி: இங்கிட்டு வா..
கமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.

சிவாஜி: client officeக்கு போனீகளா??

கமல்: ஆமா ஐய்யா..

சிவாஜி: தம்மாத்தூண்டு ப்ராஜக்ட்டையா இம்புட்டு நாளா முடிக்க முடியலன்னு சண்டை போட்டீகளே.இப்போ இந்த டீமோட நெலமை புரிஞ்சுதா??

கமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த வேலைய விட்டே போயிரலாம்னு இருக்கேன்

சிவாஜி துனுக்குற்று எழுகிறார்
சிவாஜி:வேலைய...வேலைய விட்டு போறீகளா??..ஹ..இருக்கர bugஐ fix பண்ண யோசிக்காம..வேலைய விட்டு போறேன்னு சொல்லுறது மொள்ளமாரித்தனம் இல்லை??

கமல்(உடனே):அதுக்காக....

சிவாஜி:அதுக்காக???

கமல்: அதுக்காக ..கண்ட தடிப் பசங்க சொதப்பி வச்சிருக்கர கோடையெல்லாம் திருத்தப்பாக்கரது முட்டாத்தனம்.

சிவாஜி: இந்த முட்டாப் பசங்க கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. முப்பது வருஷம் டெக்னாலஜியில பின்தங்கியிருக்கற இந்த ஆஃபீஸ்ல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி: பத்து வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். முப்பது வருஷமா cobolலயும் unixலயும் கோடு தட்டிக்கிட்டு இருந்த பயக. நாராயண மூர்த்தி YYய YYYY ஆக்கணும்னு ஆள்வேணும்னப்போ ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன COBOL தூக்கிப்போட்டுட்டு Object oriented ப்ரோகிராம் எழுதுடான்னா எப்படி எழுதுவான்?? நீ படிச்சவனாச்சே...சொல்லித் தா...ஆனா நம்ம பய மெதுவாதான் புரிஞ்சுப்பான்..மெதுவாதான் பொட்டி தட்டுவான்.

கமல்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா?? அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

சிவாஜி: போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. Code அடிச்சு முடிச்சதும் clientகிட்ட ரிலீஸ் செஞ்சா வேலை செய்யும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா bugஉ..நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.

கமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.
சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

சிவாஜி: செல்ஃபோனும் ப்ளூடூத்தும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..

கமல்:..இல்ல...அப்படி இல்லைய்யா...

சிவாஜி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன். வேர ஒண்ணுத்துக்கும் ப்ரயோஜனமில்லாத ஒதவாக்கரயாயிருந்த உனக்கு ப்ரோகிராமிங் சொல்லிக் கொடுத்தேன்ல.இது வரைக்கும் ஒரு code எழுத சொல்லியிருப்பேனா உன் கிட்ட ....ஒரு code...என்ன?...ஒரு டாக்குமெண்ட்டாவது அடிக்க சொல்லியிருப்பேனா? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா?? நீ பெருசா java படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..இந்த முட்டாப்பயபுள்ளைகளுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வேலைய விட்டுப் போ..Javaல எழுது..இல்ல SAP இம்ப்ளிமெண்ட்டு பண்ணு..அந்த தெலுங்கச்சியோட கால் செண்ட்டர்ல போயி ஜல்சா பண்ணு..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...

கமல்: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..

சிவாஜி: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் ஆஃபிஸ்ல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா டெக் லீடு?? எலே யார்ரா அவன்..எங்கே டெக் லீடு??(டெக் லீடை கூப்பிடுகிறார்..)

டெக்லீடு ஓடி வந்து பணிவாக : ஐயா..

சிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா வேலைய விட்டுப் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. சீக்கிரம் K.Tய வாங்கிக்கிட்டு அனுப்பி வைக்கணும். எவ்ளோ நாளு வேணும் K.Tக்கு?

டெக் லீடு: ஒரு பத்துநாள் கெடைக்குமுங்களா??

சிவாஜி: ஏண்டாப்பு..பத்து நாள் இருந்து சொல்லிக் கொடுத்துட்டு போவீயா??...
டெக் லீடைஅனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.

சிவாஜி: பத்து நாள் முடியாது?? இவ்ளோ நாளு பொட்டி தட்டினதை சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்கன்னா நாங்கெல்லாம் என்ன பண்றதப்பூ? என்ன பண்றது?

கமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.

சிவாஜி: என்னையா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகர வரை, ஈமெயிலும் சாட்டும் செய்ய மாட்டேனப்பூ. எதுவா இருந்தாலும் நேர்ல பேசி தீத்து வையப்பூ.. அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

கமல்: ஐயா நான் இந்த ஆஃபீஸுல இருக்கர பெருசுங்களுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..

சிவாஜி: உங்களத்தானே நம்பனும்!!இந்த ஆஃபீஸ்ல வேற எந்த தருதலை இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

கமல்: போகட்டுமாய்யா??

சிவாஜி: போ...

கமல் விலகி செல்கிறார்..போகும்போது செல்ஃபோனில், "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்.." ரிங் டோனில் விளிக்கிறது. ஃபோனை எடுத்து, "செப்பம்ம்மா செப்பு" என்று கொல்ட்டியில் கதைக்கிறார்.

சிவாஜி: யப்பா இதெல்லாம் ஒவருப்பா...

கமல்: குஜிலி...கூப்ட்ரா....

என சொல்லிவிட்டு செல்கிறார்

கமல் போவதை சிவாஜி குனிந்து காண்டோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை திரும்பிப் பார்த்து மூக்க ஒடச்சுடுவேன் என்று பாசாங்கு செய்து கும்மாங்குத்து குத்துவதை போல் செய்கை செய்கிறார். சிவாஜி திருப்பி அடிக்கிறார்...
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.

விஜய் - வேட்டைக்காரன்

நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!”
இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.



விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”



பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.



ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.



ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!



விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!



போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..



"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"
"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."



ஹட்ச் - இப்போ.. வோடபோன்
மெட்ராஸ் - இப்போ.. சென்னை
பாம்பே - இப்போ.. மும்பை
கல்கத்தா - இப்போ கொல்கத்தா
சர்தார் - இப்போ.. விஜய்..



காதல் என்பது விஜய் படம் மாதிரி பார்காதவன் பார்க்க துடிப்பான்
பாத்தவன் சாக துடிப்பான்



டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200 நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலா முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?



ரிப்போர்ட்டர்: சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி
தள்ளீ போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய்: சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.



முதல் பரிசு பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள்: படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது, அவர்
என்ன பண்ணினாலும் திட்டாம் படம் பாக்கனும்….முக்கியமா உயிரோட
இருக்கனும்



குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய்" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொலற உலகம்
அது எப்படி நடிக்கும் ஜயா.. படம் எப்படி ஓடும் ஜயா?



ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வெளியாகும் தேதிய
சொல்லமாட்டிறீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான்
சொல்லலை

Friday, September 11, 2009

IT Project

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?.அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.நானும் விவரிக்க ஆரம்பிதேன்.



"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல,இங்கிலாந்து-ல இருக்குற Bank,இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.இவங்கள நாங்க "Client" nu சொல்லுவோம்."

"சரி"

"இந்த மாதிரி Client-a மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales Consultants,Pre-Sales Consultants....".இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?.ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு?.அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA,MS nu பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க"

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுதுடுவானா?"

"அது எப்படி?இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனி-ளையும் இருப்பாங்க.500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம்,50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும்.50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,எங்களுக்கு இது வேணும்,அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்."

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு" சொல்லுவோம்.

"CR-na? "

"Change Request.இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்.இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம்.இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."அப்பா-வின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்து கிட்டு தான் ஆகணும்.முடி வெட்ட போய்ட்டு,பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.இதுல project managernu ஒருத்தர் இருப்பாரு.இவரது தான் பெரிய தலை.ப்ராஜெக்ட் success-aanalum,failure-aanalum இவரு தான் பொறுப்பு"

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு"

"அதான் கிடையாது.இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது"

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்.எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி tired ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை"

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை"

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி"

"இவருக்கு கீழ Tech Lead,Module Lead,Developer,Testernu நிறைய அடி பொடிங்க இருப்பாங்க"

"இத்தனை பேரு இருந்து,எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா,வேலை easya முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?.நான் கடைசியா சொன்னேன் பாருங்க,Developer,Tester னு,அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.அதுலையும் இந்த Developer வேலைக்கு,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி,நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க"

"அந்த Testernu எதோ சொன்னியே?அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த Developer பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?.புதுசா தான் இருக்கு.சரி இவங்களாவது வேலை செய்யுராங்கள.சொன்ன தேதிக்கு வேலையமுடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி?.சொன்ன தேதிக்கு projecta முடிச்சி கொடுத்தா அந்த குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும்.நிறைய பேரு அந்த அவமானத்திற்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"Client சும்மாவா விடுவான்?.ஏன் late-nu கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.இது வரைக்கும் team குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்"

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.அன்னைக்கு Team Meetingla வச்சி நீ இருமின,உன்னோட hair style எனக்கு புடிகலை."இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கனும்."

"அப்புறம்?"

"Project முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும்,அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?" "அவனே பயந்து போய் "எங்கள தனியா விட்டுடாதீங்க.உங்க டீம்-ல ஒரு ஒன்னு,ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."இதுக்கு பேரு "Maintanence and Support".இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"Project அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வரது மாதிரி.தாலி கட்டினா மட்டும் போது,வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் Clientuku புரியஆரம்பிக்கும்."எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Monday, August 31, 2009

Quran Online